Sunday 25 December 2011

பனித்துளி மலர்கள்-3

பனித்துளி மலர்கள்-3




                                                        பனித்துளியிலே - என் 
                                                        கப்பல் பயணம் 
                                                        கவிழ்ந்து விடுமோ...
                                                        தேவை 
                                                        கவனம்!


               கண்ணன் இப்பொழுது வெகுவாக மாறியிருந்தான். இந்த இரண்டு மாதத்தில் அவனது கிராமத்து தோற்றம் மறைந்து நகர மாணவனைப் போல உடுத்தவும் நடக்கவும் பழகியிருந்தான். நகர வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இங்கு தனக்கு முழுசுதந்திரம் இருப்பதாக உணர்ந்தான். செந்திலும் வேதாவும் கண்ணனின் நெருங்கிய தோளர்களாயினர்.
           "ஹாய் கண்ணா" குரல் கேட்டு திரும்பினான் கண்ணன்.  செந்திலும் வேதாவும் வந்தார்கள்.
            "என்ன ரெடியா?"
             "எதுக்கு?"
             "பரிட்சைக்குத்தான் இன்னிக்கு முதலாம் இடைத்தேர்வு தெரியுமில்ல!"
          "தெரியும்" கண்ணன் வருத்தத்துடன் தலையாட்டினான்.
           "அதை ஏன் இவ்வளவு சோகமா சொல்றா?"
           "முதல் பரிட்சையே இங்கிலீசு பரிட்சை எனக்கு இங்கிலீசுனாலே வெட்டிப்போட்டாலும் வராது. நான் என்ன பண்ணப் போறோனோ தெரியில; முதல் பரிட்சையிலே தோத்துடுவேன் போல தெரியுது"- கண்ணன் குரல் உடைந்தது.
            "ஏய் இதுக்கு போய் ஏன் கவலைப்படறே; பேசாம என் பக்கமா உட்க்கார்ந்துடு"
            "ஏன் நீ நல்லா படிச்சிருக்கியா?"
           "ச்சேச்சே அந்த தப்பை நான் பண்ணமாட்டேன்; ஆனா  வேதா நல்லா படிச்சிருக்கா; நான் அவள் பக்கத்துல உட்கார்ந்து அப்படியே பார்த்து எழுதிடுவேன். என்னைப் பார்த்து நீயும் அப்படியே எழுதிடு."
        





             "ஏய் செந்தில் உதை வாங்குவ! கண்ணா நீ ஒண்ணும் கவலைப்படாதே; இது வெறும் இடைத்தேர்வுத்தான் இதில் மார்க் குறைவா எடுத்தாலும் பெரிசா பாதிப்பு எதுவுமில்ல; இதில கிடைக்கிற அனுபவம் அடுத்த தேர்வுக்கு உதவியா இருக்கும்; இந்த முறை இல்லனாலும் அடுத்த முறை நிச்சயமாக அதிக மதிப்பெண்கள் வாங்குவ; இப்பொழுதும் ஒண்ணும் குறைஞ்சிட மாட்ட, தைரியமாக பரிட்சை எழுது வா!" - அவன் கையைப்பிடித்து இழுத்துச் சென்றாள் வேதா.






                                                                                                        (மலரும்)

2 comments:

  1. நன்றாக இருக்கிறது..தொடருங்கள்..பதிவுகளை திரட்டிகளில் இணையுங்கள்..வாழ்த்துகள்..


    அன்போடு அழைக்கிறேன்..

    அழுகை அழ ஆரம்பிக்கிறது

    ReplyDelete
  2. உங்கள் வாழ்த்துக்களுடன் தொடருகிறேன் நண்பரே...
    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி...!

    ReplyDelete