Thursday 22 December 2011

பனித்துளி மலர்கள்-1

                                                           அர்ப்பணம்




                                                 என்
                                                 செந்நீரில்
                                                 கலந்த பின்னும் 
                                                 சேதமின்றி 
                                                  பிரிந்தவளுக்காக...!


                                                  
பனித்துளி மலர்






                                                                          பனித்துளி மலரிலே 
                                                                          பசுமையான 
                                                                          நினைவுகளும் உண்டு! 
                                                                          பார்த்திருக்கும் பொழுதினிலே 
                                                                          அதற்கு 
                                                                          ஆவியாகும் 
                                                                           தன்மையுமுண்டு! 


              "சார் என் மகனை உங்களை நம்பித்தான் விட்டுட்டு போறேன்; நீங்கதான் அவனை நல்லா பாத்துக்கணும்; அவன் நல்லா படிக்கிறது உங்க பொறுப்பு; எங்க பக்கத்துகாரரான உங்களை  பார்த்ததும்தான் எனக்கு நம்பிக்கையே வந்தது: தயவு செய்து என் மகனை பார்த்துக்குங்க சார்"
         "நீங்க ஒன்றுக்கும் கவலை படாமல் போங்க. உங்க பையன் இனிமேல் என் பொறுப்பு நான் என் புள்ளைய போல பார்த்துக்கிறேன் போதுமா!"
            "தம்பி வாத்தியார் சொல்றத கேட்டு கவனமா நடக்கணும்: எதிர்த்து பேசக்கூடாது, கெட்டசேர்க்கைக் கூடாது நீ படிச்சி பெரியாளாகணும் நம்ப கஷ்டத்தையெல்லாம் நீதான் தீர்க்கணும் புரியுதா கண்ணு!"
           "சரிப்பா" பவ்யமா தலையாட்டினான் கண்ணன்.
         "கண்ணா வகுப்பறைக்கு போப்பா" ஆசிரியரின் சொல்லுக்கிணங்க கிளம்பும் கண்ணன் தன் தகப்பனாரிடம்,  "அப்பா நான் வகுப்புக்கு செல்கிறேன், நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாமல்  ஊருக்கு   போங்க; நான் லீவுல ஊருக்கு வருகிறேன், உங்க உடம்ப பத்திரமா பார்த்துக் கொள்ளுங்கள்" என்கின்றான்.
                அப்பா ஆசிரியரிடம் விடைப் பெற்றுக்கொண்டு கிளம்புகிறார்.





                     வகுப்பறைக்குள் நுழையும் கண்ணன் அங்கிருக்கும் மாணவர்களைப் பார்த்ததும் பயமும் ஆச்சரியமும்  கலந்த ஒருவித உணர்ச்சிக்கு ஆளாகிறான். நகர வழ்வின் நாகரிக வளர்ச்சி ஒவ்வொரு மாணவனிடமும் ஒவ்வொரு விதமாய் வெளிப்பட்டது. எல்லோரும் பகட்டாக உடை உடுத்திருந்தனர். ஒவ்வொருவரின் தலையலங்காரமும் சமீபத்தில் வெளிப்பட்ட திரைப்படங்களை நினைவுப்படுத்தின. ஜன்னல் வ்ழியே வீசிய தென்றல் காற்றுக்கு ஏற்ப அவர்கள் தலை முடி நடனமாடின.
               கண்ணன் எண்ணெய் தடவி அழுத்தி வாரப்பட்ட தன் தலையை தடவி பார்த்துக் கொண்டான்.
                  "ஹாய் வெல்கம் வா இங்க உட்கார்" ஒரு மாணவன் கண்ணனை தன்னிடம்  அழைத்தான்.
                                          "உன் பேர் என்ன?"
                                            "கண்ணன்" 
        " நான் செந்தில்   நீ கிராமத்துல இருந்து வர்ரேன்னு நினைக்கிறேன் சரியா?"
                            "ஆமா" 
            "நான் இதே சென்னை மாநகர்தான்."
                     "ஹாய் செந்தில் மார்னிங்க்"
            "வெரி குட்மார்னிங்! கண்ணன் மீட் மை ஃப்ரெண்ட் வேதா: வேதா இது கண்ணன் இன்னிக்குதான் நம்ம ஸ்கூல்ல சேர்ந்திருக்கான்." 

 


                                                                                              (பொழியும்)

4 comments:

  1. உங்கள் பிளாக் படிக்கமுடியவில்லை எழுத்துக்கள் தெரியவில்லை ஆகையால் புரியவில்லை நண்பா...?!

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே! என் பிளாக்கை புதிய பொழிவுடன் வெளியிட முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு தோழர்..தொடர்ந்து எழுத வாழ்த்துகள்..

    அன்போடு அழைக்கிறேன்..

    மௌனம் விளக்கிச் சொல்லும்

    ReplyDelete
  4. தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே! நீங்கள் தரும் உற்சாகமே என் ஊன்றுகோல்!

    ReplyDelete