Monday, 26 December 2011

பனித்துளி மலர்கள்-4




                                                           என் 
                                                           கண்ணீரும் 
                                                           பனித்துளியானதடி - உன்னை 
                                                           கண்டவுடன் 
                                                           கரைந்து போனதே!


         ஒருவாரத்துக்குப் பின் தேர்வு முடிவுகள் வந்தன. கண்ணன் சராசரியாக 33 சதவீதம் எடுத்திருந்தான். செந்தில் எல்லாப் பாடத்திலும் பாஸ்மார்க் எடுத்திருந்தான். வழக்கம் போல வேதா இம்முறையும் அனைத்துப்பாடத்திலும் வகுப்பில் முதல் மாணவியாக வந்திருந்தாள்.
     



         பள்ளிவளாகத்தில் வேப்பமரத்தின் கீழே தலைகவிழ்ந்து கண்ணன் அமர்ந்திருந்தான்.
            'எந்த கப்பல் கவிழ்ந்து போயிடுச்சு கண்ணன்?"  -கேட்டுக்கொண்டே வேதா வந்தாள். அவன் நிமிரவேயில்லை. அவன் முன் தலையில் கைவைத்து நிமித்தினாள். அவன் கண்கள் சிவந்திருந்தன. கண்களை சுற்றிலும் ஈரமாயிருந்தது. பதறிப்போனாள் வேதா.
           "ஏய் கண்ணன் என்னாச்சு ஏன் அழுவுற?"       அவன் முகத்தை கவிழ்த்துக் கொண்டு விசும்பத்தொடங்கினான். அவன் முதுகு குலுங்கியது.
          "என்னாச்சுங்கறேன்ல கண்ணன் ப்ளீஸ் சொல்லு என்னாச்சு உனக்கு? டெஸ்ட்ல  மார்க் குறைவா வாங்குனதர்காகவா அழுவுற? ம்! சொல்லு இதுக்கு போய் யாராச்சும் அழுவாங்களா? அடுத்த தேர்வுல நீதான் முதல் மார்க் எடுப்ப கவலைப்படாதே! ப்ளீஸ்...  கண்ணன் அழாதே...





         அவன் நிமிர்ந்தான். கண்கள் மேலும் சிவந்திருந்தன. கன்னமெல்லாம் ஈரமாயிருந்தன.
        "வேதா! நான் வாழத்தகுதி இல்லாதவன் வேதா! வாழ்க்கையில் எனக்கு நிம்மதியே இல்லை; எல்லாத்திலேயும் தோல்விதான். எனக்கு நிறைய ஆசைகள் இருந்தாலும் அதை செயல் படுத்த முடியல; தெரியல; பார் தேர்வில்  ஒரு பாடத்தில் கூட பாசாகுல; என்னால முடியுமா வேதா? என்னால ஏதாச்சும் முடியுமா? நான் என்ன செய்வேன்? என் வழ்க்கைக்கு தேவையான எந்த திறமையும் என்னிடம் இல்லை வேதா... நா என்ன செய்வேன்.............?"
          அவன் அழுது முடியும் மட்டும் சற்று பொறுத்தாள். இவன் கண்ணீர் பின்னால் பரிட்சயின் தோல்வி மட்டும் அல்ல; எத்தனையோ நூற்றுக்கணக்கான தோல்விகள் புதைந்து போய் உள்ளன; அதற்குள் இவனுடைய தன்னம்பிக்கை புதைந்து சிக்கி உள்ளது. அந்த தன்னம்பிக்கையை வெளியே கொண்டுவர வேண்டும்; அவன் வாழ்வின் ஒளி-ஜீவன் அதிலேதான் உள்ளது என நினைத்தாள் வேதா.




         

                                                                                            (மலரும்)
        

2 comments:

  1. எத்தனையோ நூற்றுக்கணக்கான தோல்விகள் புதைந்து போய் உள்ளன; அதற்குள் இவனுடைய தன்னம்பிக்கை புதைந்து சிக்கி உள்ளது. அந்த தன்னம்பிக்கையை வெளியே கொண்டுவர வேண்டும்; அவன் வாழ்வின் ஒளி-ஜீவன் அதிலேதான் உள்ளது என நினைத்தாள் வேதா.
    >>>
    எல்லாருக்கும் இதுப்போல் ஒரு வேதாக்கள் கிடைத்தால் எல்லாருமே வெற்றியாளரகள்தான் சகோ

    ReplyDelete
  2. வேர்ட் வெரிஃபிகேஷன் எடுத்துடுங்க சகோ. அதனால் ஒரு யூஸும் இல்லை. கமெண்ட் பண்ண வருபவர்களுக்கு எரிச்சல்தான் தரும்

    ReplyDelete