Monday, 26 December 2011

பனித்துளி மலர்கள்-4




                                                           என் 
                                                           கண்ணீரும் 
                                                           பனித்துளியானதடி - உன்னை 
                                                           கண்டவுடன் 
                                                           கரைந்து போனதே!


         ஒருவாரத்துக்குப் பின் தேர்வு முடிவுகள் வந்தன. கண்ணன் சராசரியாக 33 சதவீதம் எடுத்திருந்தான். செந்தில் எல்லாப் பாடத்திலும் பாஸ்மார்க் எடுத்திருந்தான். வழக்கம் போல வேதா இம்முறையும் அனைத்துப்பாடத்திலும் வகுப்பில் முதல் மாணவியாக வந்திருந்தாள்.
     



         பள்ளிவளாகத்தில் வேப்பமரத்தின் கீழே தலைகவிழ்ந்து கண்ணன் அமர்ந்திருந்தான்.
            'எந்த கப்பல் கவிழ்ந்து போயிடுச்சு கண்ணன்?"  -கேட்டுக்கொண்டே வேதா வந்தாள். அவன் நிமிரவேயில்லை. அவன் முன் தலையில் கைவைத்து நிமித்தினாள். அவன் கண்கள் சிவந்திருந்தன. கண்களை சுற்றிலும் ஈரமாயிருந்தது. பதறிப்போனாள் வேதா.
           "ஏய் கண்ணன் என்னாச்சு ஏன் அழுவுற?"       அவன் முகத்தை கவிழ்த்துக் கொண்டு விசும்பத்தொடங்கினான். அவன் முதுகு குலுங்கியது.
          "என்னாச்சுங்கறேன்ல கண்ணன் ப்ளீஸ் சொல்லு என்னாச்சு உனக்கு? டெஸ்ட்ல  மார்க் குறைவா வாங்குனதர்காகவா அழுவுற? ம்! சொல்லு இதுக்கு போய் யாராச்சும் அழுவாங்களா? அடுத்த தேர்வுல நீதான் முதல் மார்க் எடுப்ப கவலைப்படாதே! ப்ளீஸ்...  கண்ணன் அழாதே...





         அவன் நிமிர்ந்தான். கண்கள் மேலும் சிவந்திருந்தன. கன்னமெல்லாம் ஈரமாயிருந்தன.
        "வேதா! நான் வாழத்தகுதி இல்லாதவன் வேதா! வாழ்க்கையில் எனக்கு நிம்மதியே இல்லை; எல்லாத்திலேயும் தோல்விதான். எனக்கு நிறைய ஆசைகள் இருந்தாலும் அதை செயல் படுத்த முடியல; தெரியல; பார் தேர்வில்  ஒரு பாடத்தில் கூட பாசாகுல; என்னால முடியுமா வேதா? என்னால ஏதாச்சும் முடியுமா? நான் என்ன செய்வேன்? என் வழ்க்கைக்கு தேவையான எந்த திறமையும் என்னிடம் இல்லை வேதா... நா என்ன செய்வேன்.............?"
          அவன் அழுது முடியும் மட்டும் சற்று பொறுத்தாள். இவன் கண்ணீர் பின்னால் பரிட்சயின் தோல்வி மட்டும் அல்ல; எத்தனையோ நூற்றுக்கணக்கான தோல்விகள் புதைந்து போய் உள்ளன; அதற்குள் இவனுடைய தன்னம்பிக்கை புதைந்து சிக்கி உள்ளது. அந்த தன்னம்பிக்கையை வெளியே கொண்டுவர வேண்டும்; அவன் வாழ்வின் ஒளி-ஜீவன் அதிலேதான் உள்ளது என நினைத்தாள் வேதா.




         

                                                                                            (மலரும்)
        

Sunday, 25 December 2011

பனித்துளி மலர்கள்-3

பனித்துளி மலர்கள்-3




                                                        பனித்துளியிலே - என் 
                                                        கப்பல் பயணம் 
                                                        கவிழ்ந்து விடுமோ...
                                                        தேவை 
                                                        கவனம்!


               கண்ணன் இப்பொழுது வெகுவாக மாறியிருந்தான். இந்த இரண்டு மாதத்தில் அவனது கிராமத்து தோற்றம் மறைந்து நகர மாணவனைப் போல உடுத்தவும் நடக்கவும் பழகியிருந்தான். நகர வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இங்கு தனக்கு முழுசுதந்திரம் இருப்பதாக உணர்ந்தான். செந்திலும் வேதாவும் கண்ணனின் நெருங்கிய தோளர்களாயினர்.
           "ஹாய் கண்ணா" குரல் கேட்டு திரும்பினான் கண்ணன்.  செந்திலும் வேதாவும் வந்தார்கள்.
            "என்ன ரெடியா?"
             "எதுக்கு?"
             "பரிட்சைக்குத்தான் இன்னிக்கு முதலாம் இடைத்தேர்வு தெரியுமில்ல!"
          "தெரியும்" கண்ணன் வருத்தத்துடன் தலையாட்டினான்.
           "அதை ஏன் இவ்வளவு சோகமா சொல்றா?"
           "முதல் பரிட்சையே இங்கிலீசு பரிட்சை எனக்கு இங்கிலீசுனாலே வெட்டிப்போட்டாலும் வராது. நான் என்ன பண்ணப் போறோனோ தெரியில; முதல் பரிட்சையிலே தோத்துடுவேன் போல தெரியுது"- கண்ணன் குரல் உடைந்தது.
            "ஏய் இதுக்கு போய் ஏன் கவலைப்படறே; பேசாம என் பக்கமா உட்க்கார்ந்துடு"
            "ஏன் நீ நல்லா படிச்சிருக்கியா?"
           "ச்சேச்சே அந்த தப்பை நான் பண்ணமாட்டேன்; ஆனா  வேதா நல்லா படிச்சிருக்கா; நான் அவள் பக்கத்துல உட்கார்ந்து அப்படியே பார்த்து எழுதிடுவேன். என்னைப் பார்த்து நீயும் அப்படியே எழுதிடு."
        





             "ஏய் செந்தில் உதை வாங்குவ! கண்ணா நீ ஒண்ணும் கவலைப்படாதே; இது வெறும் இடைத்தேர்வுத்தான் இதில் மார்க் குறைவா எடுத்தாலும் பெரிசா பாதிப்பு எதுவுமில்ல; இதில கிடைக்கிற அனுபவம் அடுத்த தேர்வுக்கு உதவியா இருக்கும்; இந்த முறை இல்லனாலும் அடுத்த முறை நிச்சயமாக அதிக மதிப்பெண்கள் வாங்குவ; இப்பொழுதும் ஒண்ணும் குறைஞ்சிட மாட்ட, தைரியமாக பரிட்சை எழுது வா!" - அவன் கையைப்பிடித்து இழுத்துச் சென்றாள் வேதா.






                                                                                                        (மலரும்)

Saturday, 24 December 2011

பனித்துளி மலர்கள்-2

                                                    பனித்துளி மலர்கள்-2



   

  பனித்துளியும் 
      மணித்துளியும் 
           ஒன்றுதான் - தன் 
      நினைவுகளை  
மனதினில்  
பதிக்குமே 
நன்றுதான்!


        "ஹலோ" என்று கை நீட்டினாள் அவன் தயக்கத்துடன் கை நீட்டினான். அவன் கையைப் பிடித்து பலமாய் குலுக்கினாள்.
          "நாங்க ரெண்டு பேரும் எட்டாவதிலிருந்தே ஒண்ணாத்தான் படிச்சிக்கிட்டு வற்றோம்; ரொம்ப புத்திசாலித்தனமான பொண்ணு; உனக்கு பாடத்துல என்ன சந்தேகம் வந்தாலும்  வேதாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்; வேதா பக்கத்துல உட்கார்ந்து எழுதுற எல்லா பரிட்சையிலும் நான் எழுபதுக்கு மேலதான் மார்க் எடுப்பேன்!"
           "ஏய் போதும் நிருத்து உன் கிண்டல!" செல்லமாய் செந்தில் தலையில் குட்டினாள் வேதா.

           பள்ளியின் வளாகத்தில் பூத்திருக்கும் புதிய மலர்கள் தென்றலுடன் கை குலுக்கிக் கொண்டிருந்தன.   கண்ணன் அவைகளைப் பார்த்து புன்னகைத்தான். 



                                                                                                                      (மலரும்)

Thursday, 22 December 2011

பனித்துளி மலர்கள்-1

                                                           அர்ப்பணம்




                                                 என்
                                                 செந்நீரில்
                                                 கலந்த பின்னும் 
                                                 சேதமின்றி 
                                                  பிரிந்தவளுக்காக...!


                                                  
பனித்துளி மலர்






                                                                          பனித்துளி மலரிலே 
                                                                          பசுமையான 
                                                                          நினைவுகளும் உண்டு! 
                                                                          பார்த்திருக்கும் பொழுதினிலே 
                                                                          அதற்கு 
                                                                          ஆவியாகும் 
                                                                           தன்மையுமுண்டு! 


              "சார் என் மகனை உங்களை நம்பித்தான் விட்டுட்டு போறேன்; நீங்கதான் அவனை நல்லா பாத்துக்கணும்; அவன் நல்லா படிக்கிறது உங்க பொறுப்பு; எங்க பக்கத்துகாரரான உங்களை  பார்த்ததும்தான் எனக்கு நம்பிக்கையே வந்தது: தயவு செய்து என் மகனை பார்த்துக்குங்க சார்"
         "நீங்க ஒன்றுக்கும் கவலை படாமல் போங்க. உங்க பையன் இனிமேல் என் பொறுப்பு நான் என் புள்ளைய போல பார்த்துக்கிறேன் போதுமா!"
            "தம்பி வாத்தியார் சொல்றத கேட்டு கவனமா நடக்கணும்: எதிர்த்து பேசக்கூடாது, கெட்டசேர்க்கைக் கூடாது நீ படிச்சி பெரியாளாகணும் நம்ப கஷ்டத்தையெல்லாம் நீதான் தீர்க்கணும் புரியுதா கண்ணு!"
           "சரிப்பா" பவ்யமா தலையாட்டினான் கண்ணன்.
         "கண்ணா வகுப்பறைக்கு போப்பா" ஆசிரியரின் சொல்லுக்கிணங்க கிளம்பும் கண்ணன் தன் தகப்பனாரிடம்,  "அப்பா நான் வகுப்புக்கு செல்கிறேன், நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாமல்  ஊருக்கு   போங்க; நான் லீவுல ஊருக்கு வருகிறேன், உங்க உடம்ப பத்திரமா பார்த்துக் கொள்ளுங்கள்" என்கின்றான்.
                அப்பா ஆசிரியரிடம் விடைப் பெற்றுக்கொண்டு கிளம்புகிறார்.





                     வகுப்பறைக்குள் நுழையும் கண்ணன் அங்கிருக்கும் மாணவர்களைப் பார்த்ததும் பயமும் ஆச்சரியமும்  கலந்த ஒருவித உணர்ச்சிக்கு ஆளாகிறான். நகர வழ்வின் நாகரிக வளர்ச்சி ஒவ்வொரு மாணவனிடமும் ஒவ்வொரு விதமாய் வெளிப்பட்டது. எல்லோரும் பகட்டாக உடை உடுத்திருந்தனர். ஒவ்வொருவரின் தலையலங்காரமும் சமீபத்தில் வெளிப்பட்ட திரைப்படங்களை நினைவுப்படுத்தின. ஜன்னல் வ்ழியே வீசிய தென்றல் காற்றுக்கு ஏற்ப அவர்கள் தலை முடி நடனமாடின.
               கண்ணன் எண்ணெய் தடவி அழுத்தி வாரப்பட்ட தன் தலையை தடவி பார்த்துக் கொண்டான்.
                  "ஹாய் வெல்கம் வா இங்க உட்கார்" ஒரு மாணவன் கண்ணனை தன்னிடம்  அழைத்தான்.
                                          "உன் பேர் என்ன?"
                                            "கண்ணன்" 
        " நான் செந்தில்   நீ கிராமத்துல இருந்து வர்ரேன்னு நினைக்கிறேன் சரியா?"
                            "ஆமா" 
            "நான் இதே சென்னை மாநகர்தான்."
                     "ஹாய் செந்தில் மார்னிங்க்"
            "வெரி குட்மார்னிங்! கண்ணன் மீட் மை ஃப்ரெண்ட் வேதா: வேதா இது கண்ணன் இன்னிக்குதான் நம்ம ஸ்கூல்ல சேர்ந்திருக்கான்." 

 


                                                                                              (பொழியும்)

Tuesday, 20 December 2011

பனித்துளி மலர்கள்










வறண்ட பாலையில்
மலர்ந்த மலரடி
நான்!
பனித்துளியென- என் மேல்
அமர்ந்தாய்...
எதைக் கண்டு
திடீரென
மறைந்தாய்!














காத்திருக்கும் - என்
கண்களுக்கு
நீ
காட்சி பொருளாக
வேண்டாம்!
குறைந்தபட்சம்
கண்ணீராகவேணும்
மாறிவிடு!
உன்
பனித்துளி நினைவுகளில்
என்
பாதி நாட்கள்
கரைந்துவிட்டன..!